சத்குரு பஞ்சகம்


விசாகப்பட்டிணத்தில் இருக்கும் பீமுனிப்பட்டிணம் என்ற கிராமத்தில் சத்குரு சிவனந்த மூர்த்தி அவர்களது ஆசிரமத்தைத் தரிசிக்கும் பாக்கியம் இன்று காலை கிட்டியது! அங்கே உதிர்ந்த #சத்குரு_பஞ்சகம்
குருவின் குருவே குவலயமே! தெய்வத் திருவின் வடிவே திறமே! பொருளே தவனாந்த மென்னும் தழலுருவே! எங்கள் சிவானந்த மூர்த்தீம் சரண்! சரணெய்தி னார்க்கில்லை சஞ்சலம்! மண்ணில் மரணம் பிறப்பென்னும் மாற்றம்! தருணத்தைக் கண்டு குருவின் கழல்களைப் பாற்றுவார்க் குண்டு நிஜத்தில் உயர்வு! உயர்வி லிமயமலை உள்ளத்தால் ஆழி அயர்வுக்குத் தென்றல் அமிர்தம்! பயத்தை விரட்டிடும் தாயுருவம்! வித்தைக் கரசன்! அரட்டும் மிகத்தூய அன்பு! அன்பே அவன்மார்க்கம் ஆற்றல் வளர்சிந்தை இன்பம் குருவின் இயல்புநிலை! முன்பைச் சுருக்கிடும் கைகள் சுகமவன் பேச்சு கருக்கலில் தோன்றும் கதிர்! கதிரவன் தூமதி கண்கள்! அவனே நதித்தலை கொண்ட நடிகன்! விதித்தலைப் பட்டுழலும் மாந்தர் பவம்போக்க மோதிரத்தால் குட்டுவைக்கும் கைகள் குரு!! இந்தப் பேரும்பேற்றை ஏற்படுத்திக் கொடுத்த இசைக்கவி ரமணன் ஐயாவுக்கு நன்றி!
-விவேக்பாரதி
16.02.2020

Comments

Popular Posts