கூடல் நாதன்ஆடல் நாதனை ஆன்றமெய் ஞானியர் 
தேடும் நாதனைத் தீந்தமிழ்ப் பாடல்கள்
பாடும் நாதனைப் பார்புகழ் நாதனைக்
கூடல் நாதனைக் கும்பிட மோட்சமே!

சிக்கல் நாதனைத் தாமரை வைத்ததோர்
மக்கள் நாதனை மாதுப ராசக்தி
பக்க நாதனைப் பத்தரின் நாதனைச்
சொக்க நாதனைச் சூழ்ந்திட மோட்சமே!


-விவேக்பாரதி
22.02.2020

Comments

பிரபலமான பதிவுகள்