உலக புத்தக தினம்தனிமைநேரத் துணைநமக்குப் புத்த கங்கள்
   தாள்வடிவில் உலகங்கள் புத்த கங்கள்
மனதுகளின் காண்ணாடி புத்த கங்கள்
   வாழ்க்கைக்குக் குருவிந்தப் புத்த கங்கள்
கனவுகளின் காகிதங்கள் புத்த கங்கள்
   கருத்துகளின் சினிமாக்கள் புத்த கங்கள்
நினைவுக்கும் எட்டாத கற்ப னைகள்
   நிகழ்த்துகிற மாயாவி புத்த கங்கள்!

புத்தகத்தை நம்கையில் எடுக்கும் போதே
   புதுச்சிறகு நம்முதுகில் தோன்றக் கூடும்!
புத்தகத்தின் வாசனையை நுகரும் போதே
   புலராத இளவானின் வாசம் தோன்றும்!
புத்தகத்தின் ஸ்பரிசத்தைத் தீண்டும் போதே
   புல்தரையின் பனிஸ்பரிசம் போலத் தோன்றும்!
புத்தகங்கள் நம்முடன்தான் இருக்கும் போதே
   பூமியினை வென்றசுகம் கிடைக்கும் அன்றோ!

வாருங்கள் புத்தகத்தைக் கையெடுப்போம்
   வாருங்கள் புத்தகத்தில் மூழ்கிப் போவோம்
வாருங்கள் அதில்நீந்தி முத்தெடுப்போம்
   வாருங்கள் புத்தகவானில் மிதப்போம்
பாருங்கள் கையிருக்கும் புத்தகங்கள்
   பலமுகில்கள் கையிருக்கும் புத்தகங்கள்
காரணங்கள் தேவையில்லை நாம் படிக்க
   காரணங்களா தேவை நாம் பறக்க??

-விவேக்பாரதி
23.04.2020

Comments

Popular posts from this blog

கவிதை ஆண்டாள் - 1

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி