தமிழில் பேசுற வேகத்துல டைப் பண்ணலாம்

கல்கி ஆன்லைன் மின் இதழில் வெளியான என் கட்டுரை நம் எண்ணங்கள் எப்படியெல்லாமோ சிறகடித்துப் பறக்கின்றன. மனது, சொற்களைச் சிந்திக்கும் வேகத்தில் எழுதக்கூடிய கைகள் இருந்தால், ஓர் எழுத்தாளனுக்கு எவ்வளவு சிறந்த வரமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் நினைப்பதுவே. இதனைச் சாதனை செய்யும் வகையில், நாம் வாயாரப் பேசும் சொற்களை எழுத்துகளாகத் தட்டச்சு செய்யும் மென்பொருள்களைப் பலரும் கண்டுபிடித்திருக்கின்றனர். ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கும் இந்த மென்பொருள், தமிழ் போன்ற இந்தியாவின் வட்டார மொழிகளுக்கும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. ஐ.ஓ.எஸ், கூகுள் வாய்ஸ் டு டைப் தொடங்கி பல செயலிகள் இதில் முன்னோடிகளாகத் திகழ்ந்து கொண்டிருக்கும்போதிலும், தமிழில் நாம் பேசும் தொணியைச் சரியான வேகத்தில் கணித்துப் பிழையின்றி எழுதுவது என்பது குறைவாகத்தான் இருந்துவந்தது. இந்நிலையில், ’ஸ்பீச் நோட்ஸ்’ என்று புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு வலைதளத்தில், தமிழில் ஒவ்வொரு வார்த்தைகளையும் நுணுக்கமாகக் கேட்டறிந்து, அதுவரையில் பிழையில்லாமல் தட்டச்சு செய்வதைக் கண்டோம். தமிழில், வேகமாகப் பேசினாலும் மெதுவாகப் பேசினாலும், துல்லியமாகக் கவனி