வா பறக்கலாம்
சிறகு விரிந்ததும் வானம் திறந்தது
சீக்கிரம் வா நாம் பறக்கலாம்!
சிதையும் கனவுகளும் பதறும் இதயங்களும்
சீச்சீ! உலகை மறக்கலாம்!
உறவு முகில்களுடன் உணவு தாரையுடன்
உயர்ந்து கொண்டே இருக்கலாம்! நம்
உள்ளம் எதுவரையில் செல்லும் அதுவரையில்
உரிமை என்றுநாம் களிக்கலாம்!!
-விவேக்பாரதி
10.04.2020
Comments
Post a Comment