முயற்றிண்மை


கொடியிலேக னிந்திருக்கும் திரட்சைகண்ட வொருநரி
கொடியிலேபி டித்தருந்தத் தாவித்தாவிப் பார்த்தபின்
கொடியிலேயி ருப்பதைப்பி டிக்குமாற்றல் இன்மையால்
கொடியிலேயி ருந்ததைப்பு ளிப்பதென்று சொன்னதாம்!

இதனிலேமு யற்சியின்மை என்பதைப்ப டிக்கிறோம்
இதனிலேமு யன்றிடாமல் இழிவுசெய்தல் பார்க்கிறோம்
இதனிலேயி ருந்துகற்ற பாடம்யாவும் வாழ்விலே
பொதுவிலேய மைத்துவாழப் போகமாகும் வாழ்க்கையே!!

(இது சந்த மாத்திரைகளைக் கணக்கில் கொண்டு எழுதப்பட்ட சந்தப்பாடல் அல்ல. பொதுவான ஓசைக்கு எழுதப்பட்டது)

-விவேக்பாரதி
07.05.2020
Comments

Popular Posts