திரு. கிரேஸி மோகன் அவர்கள் சொல்லி நான் என்றோ எழுதிய ஆண்டாளைக் குறித்த எனது இரு கட்டுரைகள். இன்று கண்ணில் பட, அப்படியே பதிகின்றேன். அந்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் துளசி மாடத்தை நான் பலமுறை கண்டதுண்டு. எங்கே ஆண்டாள் [எ] கோதை பிறந்தாளோ அந்த மாடத்தைத் தரிசனம் செய்கின்ற பாக்கியம் எல்லா முறையும் எனக்குக் கிட்டியதுண்டு. ஒவ்வொரு முறையும் அவளது திருமுகத்தைக் காண முற்படும் போதெல்லாம் 'பக்தியின் மிகுதியால் எம் கண்ணனை அடைந்தாள்' என்ற ஒரு புளகாங்கித உணர்வு எழுவதோடு மட்டுமல்லாமல் அந்த ஆண்டாள் சூடிக் கொடுத்து அரங்கனை மட்டும் ஆளவில்லை அதனுடன் பாடிக் கொடுத்து இத்தமிழுலகையும் தமிழையும், கவிதையையும் ஆண்டாள் என்னும் ஒரு ஆச்சர்யமான உணர்வும் எழுவதை நான் மறுக்காமல் இருக்கமுடியாது. அவள் பிறந்த நூற்றாண்டை 8ஆம் நூற்றாண்டு என்றும் வரலாறு விரிக்கின்றது. அப்படிப் பார்த்தால் 8 ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாகத் தான் காதலித்த நாரணனையே மணப்பேன் என்று வாக்கிருத்தி அதனை வெற்றிகரமாக செய்து முடித்த முதல் புதுமைப் பெண் எனலாம். எனினும், ஒக்கூர் மாசாத்தியார், காக்கை பாடினியார் என்றெல்லாம் கணக்குப்
Comments
Post a Comment