கிருமியும் பூச்சியும்
முதலில் கண்ணுக்குத் தெரியாத நோய்க்கிருமி நம்மை முடக்கிப் போட்டது! இப்போது கால் மிதிக்கும் அளவு சிறித பூச்சி நம்மை முடிக்கப் பார்க்குது!! #coronavirus #locustswarm

கண்டறியா நுண்கிருமி கால்மிதிக்கும் பூச்சியெலாம்
பண்டறியா இன்னல் படுத்துதுவே - குண்டெறிந்து
சொந்தவினம் கொன்று சுகித்திருந்த மானிடமே
எந்தவிதம் வாழ்வோம் இனி?

சீப்பூ கிருமியென்றும் சின்னதோர் பூச்சியென்றும்
பூப்பூ வெனவூதிப் போயிருந்தோம் - காப்பார்
எவர்வருவார் என்றே அழுகின்றோம்! மைந்தர்
தவிக்கின்றோம் பாராளோ தாய்!

-விவேக்பாரதி
26.05.2020
Comments

Popular Posts