மழையும் மாரியும் - தூங்கும் முன் தோன்றியது #1


கிரேஸி மோகன் பாணியில் #தூங்கும்முன்_தோன்றியது... 

சூல்கொண்ட மேகங்கள் தூறல் மழைசிந்தி
பால்கொண்ட வெண்மை படர்த்தவும் - மேல்கண்டு
வித்து முளைக்கவும் விந்தையடா யாரிந்தச்
சித்து படைக்கிறார் செப்பு!

செப்பு கலக்காத செய்ய பசும்பொன்னாய்
அப்பும் அழகு அவள்முகத்தில் - ஒப்பி
நமக்காக நல்லுலகு நல்கினாள் அந்த
உமைசெய்யும் வித்தை உணர்!!

-விவேக்பாரதி 
14.06.2020

Comments

Popular Posts