வராசக்தி சேரும் வசம் - தூங்கும் முன் தோன்றியது #2


பொன்னைப் பெரிதென்பார் போகம் பெரிதென்பார் 
மன்னர் பதவி மகிமையென்பார் - அன்னை 
அருளிருந்தால் யாவும் அருகணையும் வெற்றுப் 
பொருளிருந்தால் நோகும் பிழைப்பு!

பிழைப்போ அவள்தாள் பிடித்தல்! தினமும் 
அழைத்தே அவள்பேர் அறைதல் - உழைக்கும் 
மடமனமே கேளாய்! மகமாயி தாளைத்
தொடமுயல்வார்க் கில்லை தொடர்! 

தொடரும் செருக்கும் துரத்தும் துயரும் 
படரும் வெறுமைப் பணியும் - அடடா 
பராசக்தி பேர்சொல்லப் பேர்ந்து நொறுங்கும் 
வராசக்தி சேரும் வசம்!!

-விவேக்பாரதி 
15.06.2020

Comments

Popular Posts