நெஞ்சுக்கு வழி


நஞ்சுண்ட நாதனே நலம்வாழ வழியினை
    நல்கிய தவளே என்றால்
செஞ்சுண்ட வினையுனைச் சூழாமல் வாழ்ந்திட
    செம்மையாம் வழியும் அவளே...
மஞ்சுண்ட கடலையே மழையென்று பிழிபவள்
    மனமுனைப் பிழிந்தி டாளோ
பஞ்சுண்ட தீயெனப் பவமிற்றுப் போவதைப்
    பார்க்கவும் கூடும் மனமே!!
-விவேக்பாரதி
29.10.2020

Comments

Popular Posts