கார்த்திகைக் களிப்பு


 

-அலுவலகம் விட்டு வீடு திரும்புகையில் வீதி விளக்குகளைக் கண்டு மனம் வியந்தபோது-


வார்த்திடும் நெய்யில் வளர்ந்திடும் ஜோதி, வடிவங்களாய்
ஆர்த்திடும் வானத்(து) அழகுவேடிக்கை, அளவுடனே
வேர்த்திடும் மேகம், விளையும் ஒளிமயம் வீதியெல்லாம்
கார்த்திகை வந்ததைக் காட்டிட நெஞ்சம் களித்ததின்றே !!

-விவேக்பாரதி
29.11.2020

Comments

Popular Posts