சிண்ட்ரெல்லாக்களே!
சிண்ட்ரெல்லா என்பது ஒருவர் என்று நினைத்தீர்களா? கூட்டங்களில் செருப்பு தொலைத்த தேவதைகளின் குறியீடு! வீட்டில் பணி செய்யும் இளவரசிகளின் இலக்கிய வடிவம்! எலிகளை நேசிக்கத் தெரிந்த எளிமைகளின் கவிதைத்துவம்! பூசனிக்காய்க்களைப் பூரிக்கும் பெண்மையின் புன்னகைச் சாயல்! பிள்ளைத்தனங்களை கண்ணாடிக்குள் அடைக்காத பிம்பங்கள்! முயல் குட்டிகளைக் கொஞ்சும் மூறல்களின் வாசனைகள்! சிலிர்க்க வைக்கும் குரல்களுக்கு ஜீவனாம்ச பத்திரங்கள்! உங்களுக்கே தெரியாமல் உங்களை இளவரசர்கள் ஆக்கும் தெய்வத தெறிப்புகள்! சிண்ட்ரெல்லாக்களை ஆராதியுங்கள்! அவர்கள் உங்களுக்கு காதலுடன் சேர்த்து ஞானமும் தருகிறார்கள்! சிண்டரெல்லாக்களாக மாறிப்போங்கள், அதுதான் மரணமில்லாப் பெருவாழ்வுக்கு வாசலில் கிடைத்த எளிய வழி!! -விவேக்பாரதி 23-12-21