பொங்கலோ பொங்கல் | பொங்கல் வாழ்த்துப் பாடல்


பொங்கலோ பொங்கல் - ஹேஹே
பொங்கலோ பொங்கல்... 

கூடி நின்னு கும்மியடிச்சு 
கொலவ போட்டு பாடுங்களேன்..
நாடு செழிக்க வேணுமுன்னு 
நல்ல வார்த்த பாடுங்களேன்...

நஞ்ச புஞ்ச கொஞ்சி சிரிக்க 
நடுவில் பொங்கப் பான ஜொலிக்க 
மஞ்சக் கொத்து செங்கரும்பு 
மணக்க மணக்க ஆடுங்களேன்.. (பொங்கலோ பொங்கல்)

உழைக்கும் மக்க வேர்வையெல்லாம் 
நெல்லு மணியா பூத்திருச்சே
உச்சி கால சூரியந்தான்
ஒலகம் முழுக்க காத்திருச்சே

மாடு கன்னு காளைகளும் 
மனுசப்பய கூட்டங்களும் 
கூடி வாழும் வாழ்க்கமொற 
கொண்டாட்டமா ஆயிருச்சே... (பொங்கலோ பொங்கல்)

விவசாயி கஷ்டப்பட்டா 
விடியலில்ல பாத்துக்கடா 
அவன்சோலி நஷ்டப்பட்டா 
அடுப்பெரியா தேத்துக்கடா 

வெளைஞ்ச பயிரு அவனுடைம
வெலைய சொல்வது அவனுரிம
வெள்ளாமைக்கு நன்றிசொல்லி 
கும்பிடுவதே நம்ம கடம!! (பொங்கலோ பொங்கல்)

பாடலைக் கேட்க 


–விவேக்பாரதி 
14.01.2021

Comments

Popular Posts