Posts

Showing posts from March, 2021

இசைக்கவிக்கு பிறந்தநாள்

Image
புயலொன்று பூவாக அவதரித்தாய்  புன்னகை ஒன்றையே தினம் தரித்தாய்  இயல்பாக இறைவாழும் மனம் படைத்தாய்  இன்பத்தை மொத்தமாய் விலைக்கெடுத்தாய்  சுயலாபம் பாராமல் சொல் தொடுத்தாய்  சுந்தரா அன்பர்க்கு சுகம் கொடுத்தாய்  அயலார்கள் இல்லாத வாழ்வமைத்தாய்  அடியனை மனமேற்றி அருள் கொடுத்தாய்  அன்னம் கொடுக்கையில் தாயின் கைகள்  அன்பாய் அதட்டினால் தந்தை நெஞ்சம்  முன்னம் நடக்கையில் அண்ணன் பாட்டை  முறுவலிக்கும் போது சின்னப் பிள்ளை  இன்னும் எனக்கொரு குருவின் ரூபம்  இசையோடு கவிதைகள் பொழியும் போது  மன்னாதி மன்னனென மாறும் தோற்றம்  மண்மீதில் நீதெய்வம் செய்த ஊற்றம்  கவிதையா செய்கிறாய் இல்லை அந்தக்  ககனத்தை பால்வெளியை சொற்க ளாலே தவம்செய்த படிதட்டி பொடித்தெ டுத்து  தரமான தெய்வீகச் சாறு சேர்த்து  சுவைகூட்ட இசையெனும் அமுதம் பெய்து  சுண்டும்வரை யில்காய்ச்சி ஆற வைத்து  செவிகட்குள் இளந்தங்க வண்ணத்தில் நீ  சேர்க்கிறாய் மயங்கினோர் உன்னைச் சுற்றி  திருவான தமிழைநீ பற்றிக் கொண்டாய்  திறம்கண்டாய் கவிஞனென ஆகி விட்டாய்  பரமான ஒருத்தியைப் பற்றிக் கொண்டாய்  பறவையானாய் அவளின் பக்தன் ஆனாய்  வரமாக மனையாளைப் பற்ற

சிவபெருமான் அழுவாரா?

Image
நிந்தாஸ்துதி என்பது பழிப்பது போல புகழ்வதில் சேரும். இதனை தூற்றாப்போற்றி என்று அருமையாக தமிழாக்கியிருக்கிறார் பாவலர் மா வரதராசன். அவர் வழியில் சிவன் மீது எழுதிய தூற்றாப்போற்றி.  என்னதான் துக்கமோ எப்போதோ காடுபோனாய்   தின்னும் விஷம்குடித்தாய் தீராமல் – இன்னும்  கழுத்தில் அரவணிந்தாய் கையோடு கொண்டாய்  அழுவையோ நீயும் அரா?? கருத்து :  சிவபெருமானே! உனக்கு அப்படி என்னதான் துக்கமோ? சின்னஞ் சிறுவயதிலேயே சுடுகாட்டுக்குச் சென்றுவிட்டாய் (சுடுகாட்டில் சிறுவயது சிவன் தூங்குவது போல் உள்ள படம் நினைவுக்கு வருகிறதா?) சுடுகாட்டில் வாழச் சம்மதித்தது பற்றாமல், உடலையும் ஆவியையும் சேர்த்துத் தின்னும் விஷத்தை எடுத்து மடமடவென்று குடித்தாய். பின்னர் அதுவும் தீராமல் இன்னும் என்ன செய்யலாம் என்று யோசித்தபடி, விஷத்தின் மூலமாக பாம்பையே உன் கழுத்தில் அணிந்துகொண்டாய், கையில் பிச்சை எடுக்க ஓட்டை ஏந்தி நின்றாய். ஒரு மனிதன் இழிவாக நினைக்கும் அத்தனை காரியங்களும் உனக்கு நடந்து விட்டதே, ஓரத்தில் தனியாய் உட்காந்து நீதான் அழுது கண்ணீர் வடிப்பாயோ? சொல்வாய் அரனே!  –விவேக்பாரதி  27.03.2021

தோழிகள் இஸ் ஈக்வல் டூ வரங்கள்

Image
தோழி ஒருத்தி படம் அனுப்பினாள்  அவள் : ஒரு genuine question. Answer பண்ணுவியா? நான் : ம்ம் சொல்லு... வழக்கம்போல் இல்லாமல் உண்மைய சொல்றேன்.  சிரித்தபடியே அவள் : நா குண்டாவா இருக்கேன்? படத்தை பார்த்து சொல்லு! நான் : ம்ம்ம்... இரு  படத்தைப் பார்த்தேன்... அவளுக்கு சொல்ல நினைத்த பதில் இப்படி விரிந்தது ! தலைபார்த்தேன் கருமேக மழையைப் பார்த்தேன்       சரிகின்ற உடைபார்த்தேன் சோலை பார்த்தேன்  இலைபார்த்தேன் அதனைப்போல் காதைப் பார்த்தேன்       இரவுவரும் நிலவிரண்டு கண்ணில் பார்த்தேன்  நிலைபார்த்தேன் சூரியனின் பணிவைப் பார்த்தேன்      நிழல்பார்த்தேன் பாராத அழகைப் பார்த்தேன்  கலைபார்த்தேன் எடைமட்டும் பார்க்க வில்லை       கவலையிலை! மலர்மூட்டை கனக்கு மாமோ? விளைவு?  ஒருநாள் லன்ச் அவளுடன்...  டாட்டா பை! பை!

என்ஜாய் என்ஜாமி

Image
Katy Perry இன் ‘தி ரோர்’ கேட்டிருக்கிறேன். அதன் திரையாக்கம் கண்டு சிலிர்த்த எனக்கு என்ஜாய் எஞ்சாமி மேலும் ஒரு சிலிர்ப்பைக் கொடுத்திருக்கிறது. தீ மாதிரி பாட்டுப் பாடும் பெண் பெற்றதனால், எனது மரியாதைக்குரிய சநா பொறாமைக்குரியவரும் ஆகிறார்.  பறையும், தப்பும் பலரால் விரும்பப்படும் மண்ணின் உண்மை இசை. ஒப்பாரியும் அப்படித்தான். என்ஜாய் எஞ்சாமி எனக்கு தரமுயர்ந்த ஒப்பாரியாக கேட்பது இதுவரை நான் அனுபவிக்காத உணர்வுத் தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. நகத்தில் கூட அலங்காரம் செய்துகொண்ட தீயின் விரல்கள், கரிசல் மண்ணைக் கையில் எடுக்கையில், மனதில் ஈரம் ஒட்டிக் கொள்கிறது. ராப் பாடகர் அறிவின் வரிகளும், விளையாட்டுகளும் கண்ணாடிபோல் இருக்கின்றன.  மொத்தத்தில் நான் என்ஜாய் செய்தேன்!!