என்ஜாய் என்ஜாமி

Katy Perry இன் ‘தி ரோர்’ கேட்டிருக்கிறேன். அதன் திரையாக்கம் கண்டு சிலிர்த்த எனக்கு என்ஜாய் எஞ்சாமி மேலும் ஒரு சிலிர்ப்பைக் கொடுத்திருக்கிறது. தீ மாதிரி பாட்டுப் பாடும் பெண் பெற்றதனால், எனது மரியாதைக்குரிய சநா பொறாமைக்குரியவரும் ஆகிறார். 

பறையும், தப்பும் பலரால் விரும்பப்படும் மண்ணின் உண்மை இசை. ஒப்பாரியும் அப்படித்தான். என்ஜாய் எஞ்சாமி எனக்கு தரமுயர்ந்த ஒப்பாரியாக கேட்பது இதுவரை நான் அனுபவிக்காத உணர்வுத் தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. நகத்தில் கூட அலங்காரம் செய்துகொண்ட தீயின் விரல்கள், கரிசல் மண்ணைக் கையில் எடுக்கையில், மனதில் ஈரம் ஒட்டிக் கொள்கிறது. ராப் பாடகர் அறிவின் வரிகளும், விளையாட்டுகளும் கண்ணாடிபோல் இருக்கின்றன. 

மொத்தத்தில் நான் என்ஜாய் செய்தேன்!! 

Comments

  1. கொஞ்சம் பழங்குடி இசை கொஞ்சம் ராப் கொஞ்சம் ஒப்பாரி இரண்டே இரண்டு பொருளுள்ள வரிகள் மற்றும் இசை நிரப்பி சப்தங்கள். எஞ்சாயி எஞ்சாமி காதுகளுக்கானது. கவிஞர்களுக்கானதா என்பது கேள்விதான்

    ReplyDelete
    Replies
    1. காதுகளுக்கானது. அவ்வளவுதான்.

      Delete

Post a Comment

Popular Posts