தோழிகள் இஸ் ஈக்வல் டூ வரங்கள்தோழி ஒருத்தி படம் அனுப்பினாள் 

அவள் : ஒரு genuine question. Answer பண்ணுவியா?

நான் : ம்ம் சொல்லு... வழக்கம்போல் இல்லாமல் உண்மைய சொல்றேன். 

சிரித்தபடியே அவள் : நா குண்டாவா இருக்கேன்? படத்தை பார்த்து சொல்லு!

நான் : ம்ம்ம்... இரு 

படத்தைப் பார்த்தேன்... அவளுக்கு சொல்ல நினைத்த பதில் இப்படி விரிந்தது !

தலைபார்த்தேன் கருமேக மழையைப் பார்த்தேன் 
    சரிகின்ற உடைபார்த்தேன் சோலை பார்த்தேன் 
இலைபார்த்தேன் அதனைப்போல் காதைப் பார்த்தேன் 
    இரவுவரும் நிலவிரண்டு கண்ணில் பார்த்தேன் 
நிலைபார்த்தேன் சூரியனின் பணிவைப் பார்த்தேன்
    நிழல்பார்த்தேன் பாராத அழகைப் பார்த்தேன் 
கலைபார்த்தேன் எடைமட்டும் பார்க்க வில்லை 
    கவலையிலை! மலர்மூட்டை கனக்கு மாமோ?


விளைவு? 

ஒருநாள் லன்ச் அவளுடன்... 

டாட்டா பை! பை!

Comments

Popular Posts