என் தோரண வாயில்


அன்பு ரசிகாவுக்கு, 

சொற்கள் என்னைக் கூட்டிப் போகும் 
    சுந்தரப் பாதையிலே - நான் 
தொட்டதை எல்லாம் அனுபவ மாகச் 
    சொடுக்கிப் போடுகிறேன்! 
கற்கள் சிதறி விழுவது போலவை
    காலத்து வீதியிலே - சிறு 
கவிதைக ளாகி பாடல்களாகி 
    கழன்று விழுகிறதே! 

ஆளறியாத மாய வெளிக்குள் 
    அகழ்ந்து போகையிலே - மனம் 
ஆனந்தம் எனும் முகில்மேல் ஏறி 
    அளந்து பார்க்கையிலே,
தோளறியாமல் சிறகு முளைக்க 
    தொடுவான் தொடுகின்றேன் - அதில் 
தோன்றிய வண்ணம் குழைத்துக் கவிதை 
    தோறும் இழைக்கின்றேன்! 

என் 
தோரண வாயில் இதுதான், உன்னை 
    தொடக்க அழைக்கின்றேன்!! 

–விவேக்பாரதி
15.02.2021

Comments

Popular Posts