தமிழால் நிமிர்ந்தேன்


ஒரு செய்யுளில் உள்ள சொற்களைக் கரந்து, அதனுள் ஒளிந்திருக்கும் இன்னொரு பாவகையை எழுதுதல் கரந்துறைப் பாட்டு எனப்படும். அப்படி முயன்ற ஒன்று 

– அறுசீர் விருத்தம் – 

குமிழென நொந்தேன் குறிதவ றானேன் 
   குமைந்து விழுந்தேனே 
அமிழ்தென வந்தாய் அறிவினைத் தந்தாய் 
   அமர்ந்திட வைத்தாயே 
தமிழ்மொழித் தாயே செறிவெனில் நீயே
   தமிழனைக் காத்தாயே 
நிமிர்ந்தனன் இன்றே நெறிதரு தமிழே 
   நிமிடமும் பிரியேனே!

– வஞ்சித் தாழிசை –

குமிழென நொந்தேன்
அமிழ்தென வந்தாய்
தமிழ்மொழித் தாயே
நிமிர்ந்தனன் இன்றே  

குறிதவ றானேன்
அறிவினைத் தந்தாய்
செறிவெனில் நீயே
நெறிதரு தமிழே

குமைந்து விழுந்தேனே
அமர்ந்திட வைத்தாயே
தமிழனைக் காத்தாயே 
நிமிடமும் பிரியேனே!!   

–விவேக்பாரதி 
15.04.2021

Comments

Popular Posts