அமுதூட்டும் அம்மா


அப்பாவைக் கூப்பிட்டேன் உம்உம் என்றார்
   அண்ணாவைக் கூப்பிட்டேன் திரும்பிப் பார்த்தான் 
எப்போதும் கதையளக்கும் பாட்டியை நான் 
   எழுப்பித்தான் கூப்பிட்டேன் புன்னகைத்தாள் 
ஒப்பாகாத் தாத்தாவைக் நான் கூப்பிட்டேன் 
   ஒன்றுமே கேட்காது டீவி பார்த்தார் 
அப்போதே அம்மாவைக் கூப்பிட்டென் வந்(து)
   ஆவென்றாள் அமுதூட்டி என்னென்றாளே!!

–விவேக்பாரதி
20.04.2021

Comments

Popular Posts