காகமா அணிலா? #விடிகாலைஞானங்கள் 

காக்கைகளின் கூட்டத்தில் சிக்குண்ட அணில்குஞ்சு காக்க வென்று 
வாழ்க்கைக்குப் போராடி தத்தளிக்க நான்கண்டேன் வையம் போகும் 
போக்குக்கு நிகரென்று பெருமூச்சு விடச்,சேர்ந்தே பொழுது பூக்க 
நோக்குற்றேன் ஓடுகிறேன் அணில்நானா காக்காயா நவில்வ தாரோ?? 

-விவேக்பாரதி 
12.05.2021

Comments

 1. அணிலுக்கு விரைவும் காக்கைக்குச் சிறகும் தந்தவனைக் கேட்டாலவன்
  தவறாது நவின்றிடுவான்.
  வவேசு

  ReplyDelete
  Replies
  1. அவனைக் கேட்பது எப்படி எப்போது என்று தெரியாமல்தானே காக்கையும் அணிலுமாய் மாறி மாறி ஓடுகிறோம் ஐயா.

   Delete

Post a Comment

Popular Posts