கோயிலும் தெய்வமும்

 

#விடிகாலைஞானங்கள்

உடலைநீ கோயில்செய் உள்ளம் கருவறையாக்கொள் உள்ளிருக்கும் 
கடவுள்தான் உயிரென்று காப்பாற்றல் மதமாய்க்கொள் காலம் கேட்கும் 
நடை,ஓட்டம் பூஜைகள், தொடும்வியர்வை அபிஷேகம் நன்றாய் உள்ளே 
விடும்மூச்சே வேதங்கள் வினைசின்ன மேகங்கள் விலகும் தானே 

-விவேக்பாரதி
14.05.2021

Comments

  1. Swetha PuhazhendhiMay 14, 2021 at 7:48 AM

    மிகச்சிறந்த சிந்தனை ..
    சிறு வயதில் கோயில்களின் கருவறையிலும் பக்திப் படங்களிலும் நான் கண்ட கடவுள்கள் ஏறத்தாழ மனிதர்களின் உருவிலேயே இருந்தன. அன்று கடவுள்களில் மனிதனை (மனித உருவை) தேடியதிலிருந்து இன்று மனிதனுள் கடவுளை பார்க்கக் கற்றுக்கொண்டிருப்பதே என் வாழ்வில் நான் கற்ற மிகமுக்கிய பாடம். விடிகாலைஞானங்கள் இனிதே தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts