கடலா? குட்டையா?

 
#விடிகாலைஞானங்கள்

குட்டையொரு தேக்கம்தான் கடல்நீரும் தேக்கம்தான் குறியி லாமல் 
எட்டுவைக்கும் ஓட்டத்தில் சாக்கடையும் ஓடையுமோர் தரமே! மண்ணில் 
பட்டிருக்கும் வாழ்க்கையிதில் ஓட்டமெனில் ஓடை,நதிப் பாய்ச்சல் வேண்டும் 
கிட்டியதோர் இடமெனிலோ கடலாழம் விரிவெல்லாம் கிளைக்கச் செய்யே! 

-விவேக்பாரதி
15.05.2021

Comments

Popular Posts