ஆன்றோர் உயர்வு


#விடிகாலைஞானங்கள்

உடலெண்ணம் ஒழியென்பார் ஒருசாரார் மற்றொருவர் உடல்பேண் என்பார் 
மடமனமே என்றொருவர் ஏசிநிற்பார் மற்றொருவர் மதித்திருப்பார்
அட!இதிலேன் ஆன்றோர்க்கும் இத்தனையாய்த் தடுமாற்றம் என்றே ஆய்ந்தால் 
உடல்மனத்தை மதித்தவர்கள் அதன் ஆட்சிக்கு அடங்காமல் உயர்ந்திட்டாரே!! 

-விவேக்பாரதி 
16.05.2021

Comments

Post a Comment

Popular Posts