முத்து தரும் சிப்பி


#விடிகாலைஞானங்கள் 

முத்துதரும் ஒருசிப்பி தூசு விழுந்தாலும் உடல் மூடிக் கொண்டு
வைத்திருக்கும் சுரபிகளால் பகையெனினும் அத்தூசை முத்தாய் ஆக்கும் 
ஒத்ததுபோல் அனுபவங்கள் அத்தனையும் பாடமென உள்ளே சேர்த்தால் 
சித்திரமாய்ப் பின்னொருநாள் திறக்கையிலே அதனொளியால் ஜெயிக்கலாமே! 

-விவேக்பாரதி 
17.05.2021


Comments

Popular Posts