மேக வாழ்க்கை

 

#விடிகாலைஞானங்கள்

மேகங்கள் உருமாறும் அலையுமது தான்வாழ்க்கை மேலே கொஞ்சம் 
ஆகச்சி றந்தகுளிர் தென்றல்பட் டால்தூறும் அதுவே வாய்ப்பு,
வேகங்கொள் காற்றடித்து மழைகலைக்கும் அதுபிறரின் வெறுப்பு, கொண்ட
ஆகத்தைப் பிழிந்துழைத்து மழையாகும் அதுநன்றி அறிவா யப்பா! 

-விவேக்பாரதி
13.05.2021

Comments

Popular Posts