ககனத்துளி மடல்கள் 1


-மஸ்கெட்டிலிருந்து கவிஞர் சுரேஜமீ-

அன்புக்குரிய விவேக்கிற்கு,

வாழ்த்துகள். உனது கற்பனைச் சிறகில் வலம்வந்த பண்டை இலக்கியத் தேனைக் ககனம் அமுதெனப் பொழிந்தவாறு ‘ககனத்துளி’யில் கண்டேன். கதிர்கண்ட கமலமன்ன மனத்தே விரிந்தேன்.  

தலைப்பும் சொல்ல வந்தே சேதியும் நறுக்குத் தெறித்தாற் போல் நச்சென்று விளங்கியது. மீண்டும் படிக்கத் தூண்டும் துளிகளாகவே எனக்குப் பட்டது. மிகச்சில இடங்களில் ஒருவேளை உன் கவனம் தவறிவிட்டதோ என எண்ணும் அளவில் வார்த்தைக் கோர்வைகள் சற்றே மதுவின் போதையில் மயங்கி உருண்டாற் போல் இருந்தது. உதாரணமாக, இளைத்தவள் கட்டுரையை வாசி.

மற்றபடி,

அமுதிட்ட வண்ணம்போல் அழகுதமிழ் வார்த்தைகள் ஆசை கூட்ட
அமைத்திட்ட வண்ணத்தில் ஆன்றோரும் சான்றோரும் உன்னை வாழ்த்த
நிமிர்கின்றாள் தமிழன்னை நிலத்திலென்றும் நின்போன்ற கவிஞன் வாக்கால்
நமைக்காக்கும் அவள்தாளை நாளுபற்றி நானிலமே போற்ற வாழி!

அன்புடன்
சுரேஜமீ
மஸ்கட்
04.06.2021 காலை 9:58

Comments

Popular Posts