கண்ணன் வந்த களிப்பு | இரட்டை மணிமாலை

வெண்பா நீல மணிவண்ணன் நித்திலமாய்ப் பூத்துவிட்டான் கோலம் எழுதிநீ கொண்டாடு – ஜாலமாய் மண்ணில் பலசெய்து மானிடரை வாழ்விக்க கண்ணன் பிறந்தான் களி (1) விருத்தம் களித்தாடிக் கொண்டாடு தோழி ! நம்மைக் காக்கின்ற மயில்வண்ணன் தோன்றி விட்டான் வெளித்தோற்றம் கருநீல மாகும் ! அந்த விரலெல்லாம் செந்தாம ரையாம் ! வான விளக்கைப்போல் கண்களிலே ஒளியாம் ! கண்ணன் விளையாட்டைப் பார்க்கின்ற போதோ அள்ளி அளிக்கின்றான் கைபிசைந்த மண்ணை ! கண்ணன் அழகுக்கே உரித்தான சேட்டைப் பிள்ளை (2) வெண்பா பிள்ளையிவன் வந்தான் பிடியில்சிக் காமலினி கிள்ளையென நம்யசோதா கீழ்மேலே – துள்ளிடுவாள் கோகுலத்தில் வாழ்கின்ற கோபியர்நம் காதலுக்கு ஆகுலமே கண்ணன் அழகு . (3) விருத்தம் அழகுக் கண்ணன் குழலினால் அமுதப் பாட்டுப் பாடுவான் பழகும் போது சேட்டைகள் பண்ணு கின்ற பாலகன் வழக்கா மாக வெண்ணையை வாயில் அப்பிக் கொள்ளுவான் மழலை மாறா குணத்தினன் மலையை விரலில் தூக்குவான் (4) வெண்பா வான நிறம்பார்த்து வாயைப்