அந்த அலையிடம்...


அந்த அலையிடம் 
யாரேனும் சொல்லுங்கள்
மணல் 
கையோடு வாராதென...

அந்த மணலிடம் 
யாரேனும் சொல்லுங்கள்
அலை 
அழைத்துப் போகாதென...

அந்தக் கடலிடம் 
யாரேனும் சொல்லுங்கள்
காற்று 
தனியாய் வீசாதென...

அந்தக் காற்றிடம் 
யாரேனும் சொல்லுங்கள்
கடல் 
பெயர்க்க முடியாதென...

அந்த நிலவிடம் 
யாரேனும் சொல்லுங்கள்
இருள் 
முற்றும் மறையாதென... 

அந்த இருளிடம் 
யாரேனும் சொல்லுங்கள் 
நிலா 
தேய்ந்தும் வளரும் என...

இங்கு என்னிடம் 
யாரேனும் சொல்லுங்கள் 
அலை 
நினைவைக் கழுவாதென... 

அந்த அலையிடம் 
யாரேனும் சொல்லுங்கள்
மனம் 
நிறுத்த முடியாதென!!

-விவேக்பாரதி
03-09-2021

Comments

Popular Posts