மண்டியிடு


காலுக்குக் கீழே உரசல்
எட்டிப் பார்த்தால்
குட்டி மனம்.. 
தூக்கிக் கொஞ்சும் ரகம்! 
அள்ளி எடுத்து 
மார்போடு அணைத்துக்
கொஞ்சிச் சிலிர்த்தேன் 
மறுகணம் கைவிட்டகன்று
உடலுக்குள் நுழைந்து
மூளை மடிப்பேறி
என்னை மண்டியிடச் செய்து
ராஜாங்கம் செய்கிறது!
இதென்ன வேலி ஓணான் கதை 
என நான் மண்டி இடுகையில், 
கை உரசத் தெரிகிறது
மேலும் ஒரு கால்!!

#மன்_கி_பாத்

விவேக்பாரதி
25.09.2021

Comments

Popular Posts