உருகும் நிலவுஇன்ஸ்டாவில் இந்தப் படத்தைக் கண்டதும் இதயம் சொன்னது - 

கலைந்திருக்கும் கூந்தல் என்னைக் கலைக்கப் பார்க்குதடி 
கண்ணுக்குள்ளே இருக்கும் காந்தம் என்னை அழுத்துதடி 
சிலைநீ என்றே நினைத்துத் தீண்டக் கைகள் துடிக்குதடி 
சீக்கிரமாக போனாயே என இளமை படுத்துதடி 

விரலின் நகங்கள் முத்துப் பறல்கள் முதுகில் அரிக்குதடி 
விளையாடித்தான் பார்க்கக் காலம் விம்மி அழைக்குதடி
இரவெல்லாம் உன் நினைவில் நிலவு உருகி வழியுதடி 
இருக்கும் மேகம் அதிலே வழுக்கி தரையில் விழுகுதடி!!

விவேக்பாரதி
24-10-2021

Comments