ஏசு என்னை நேசிக்கின்றார்


ஏசு
 என்னை நேசிக்கின்றார் 
இதயத்தில் ஸ்வரம் வாசிக்கின்றார்
பேசும் போது நாவில் உள்ளார்
பேணும் இயற்கைப் பூவில் உள்ளார்

கையைப் பிடித்து நடந்து கொண்டே 
கால ஓட்டம் கடத்துகின்றார்
மெய்யென்று அவரை நம்பி வாழ
மேய்ப்பர் உலகை நடத்துகின்றார் 

பாவம் செய்ய நினைக்கும் போதில்
பயம் உண்டாகச் சிரிக்கின்றாரே
தேவம் எம்மை ஆளுகின்றார்
தெளிவை நெஞ்சில் ஊணுகின்றார்!! 

-விவேக்பாரதி
30.10.2021

Comments

Popular Posts