Posts

Showing posts from December, 2021

சிண்ட்ரெல்லாக்களே!

Image
சிண்ட்ரெல்லா என்பது  ஒருவர் என்று நினைத்தீர்களா? கூட்டங்களில் செருப்பு தொலைத்த  தேவதைகளின் குறியீடு!  வீட்டில் பணி செய்யும் இளவரசிகளின் இலக்கிய வடிவம்!  எலிகளை நேசிக்கத் தெரிந்த  எளிமைகளின் கவிதைத்துவம்!  பூசனிக்காய்க்களைப் பூரிக்கும்  பெண்மையின் புன்னகைச் சாயல்!  பிள்ளைத்தனங்களை  கண்ணாடிக்குள் அடைக்காத பிம்பங்கள்!  முயல் குட்டிகளைக் கொஞ்சும்  மூறல்களின் வாசனைகள்!  சிலிர்க்க வைக்கும் குரல்களுக்கு  ஜீவனாம்ச பத்திரங்கள்!  உங்களுக்கே தெரியாமல்  உங்களை இளவரசர்கள் ஆக்கும்  தெய்வத தெறிப்புகள்!  சிண்ட்ரெல்லாக்களை ஆராதியுங்கள்! அவர்கள் உங்களுக்கு  காதலுடன் சேர்த்து ஞானமும் தருகிறார்கள்! சிண்டரெல்லாக்களாக மாறிப்போங்கள், அதுதான் மரணமில்லாப் பெருவாழ்வுக்கு வாசலில் கிடைத்த எளிய வழி!! -விவேக்பாரதி 23-12-21

என் இசை கேளுங்கள்

Image
என்னிசை கேளுங்கள் - அது இன்பத் தனிதியானம்  புன்னகை தாருங்கள் - கதை  புரிந்த மறுநிமிடம்! வாழ்த்திசை எனதாகும் - நல்ல  வார்த்தைகள் அதிலதிகம்  தாழ்த்தி இசைக்காதீர் - அது  தர்மத்தின் இசையாகும்! மங்கள இசையெனது - அதில்  மனிதர்களே கடவுள்  பொங்கிடும் உற்சாகம் - நான் பூஜை செய்யும் மதம் மெல்லிசை அதுவானால் - உமை  மென்மை மலராக்கும்  வல்லிசை ஆனாலோ - உங்கள்  வாழ்க்கையைக் கல்லாக்கும்  துள்ளிசையும் வரலாம் - உங்கள்  தூக்கம் தடைபடலாம்  உள்ளிசையாக வரும் - சில,இவ் ஊரிசை ஆகவரும்  எவ்விசை என்றாலும் - அதில் இலங்குவ(து) என்சுருதி  செவ்விசையாய் வருமே - இந்த  ஜகத்தின் நலன்கருதி  மரண இசைதருவேன் - அதில்  மரித்தவர் புகழடைவார்  சரண இசைபடைத்தால் - இறை  தரிசனம் அதிலிருக்கும்  படைக்கும் இசையெனது - எனில்  படைப்பவன் நானல்ல  கொடுக்கும் இயற்கையொன்றே - நான்  கும்பிடும் இறையாகும் இசைக்கும் கருவிகளை - என்  இதயம் சுமப்பதனால்  அசைக்கும் மூச்சினிலும் - இசை  ஆடிப் பிறக்கிறது!  வரம்பே இல்லாமல் - இசை வாழ்வாய் அமைகையிலே  மரபும் புதுமையும்தான் - இந்த  மண்ணில் உயிர்க்கிறது கணக்கு தெரிவதில்லை - நான்  காற்றில் படைக்குமிசை  மனத்துக் குளத

சீக்கிரம் வந்தால்....

Image
தம்பி, கவிஞர் வெ.விஜய் கொடுத்த ஈற்றடிக்கு எழுதிய வெண்பாக்கள்.   தலைவனை எண்ணிக் காத்திருக்கும் தலைவி  மாமன் நினைப்போடே மாதம் கழிக்கின்றேன்  காமன் கணைபட்டுக் காய்கின்றேன் - சாமத்தில்  பேய்க்கனா கண்டு புரள்கின்றேன்! காதலன்  சீக்கிரம் வந்தால் சிறப்பு! திருமணத்துக்காகக் காத்திருக்கும் தலைவன்   கன்னி பெயராகக் காத்திருந்து நோகின்றேன்! வண்ணக் கரம்கோக்க வாழ்கின்றேன் - பெண்மையின்  பூக்கரம் பற்றிப் புகழ்பெறக் கல்யாணம்  சீக்கிரம் வந்தால் சிறப்பு!  பட்டிணத்தடிகள்  இதயத்துக் குள்ளே இறைகண்டு கொண்டேன் சதையெத்துக் கென்றே சலித்தேன் -  விதியென்னும்  பேய்க்கரும்பு தித்தித்துப் பேறுதரும் நன்னாள்தான் சிக்கிரம் வந்தால் சிறப்பு! மழைக்குக் காத்திருக்கும் உழவன்  காய்ந்த வயல்வெளியால் கண்களிலே நீர்பெருக  ஓய்ந்து வலியாலே உள்நொந்தேன் - சாய்ந்தநெல்  தீக்கிரை யாகுமுன் தீரா முகில்மழை சீக்கிரம் வந்தால் சிறப்பு! மரணத்திற்குக் காத்திருக்கும் முதுமை நோய்வந்து நச்சரிக்க நோவில் உடல்கொதிக்க  வாய்வந்து பேசா வரிகுளறப் - பாய்வெந்து  யாக்கைகிடக் காமல் யமன்கொண்டு போகும்நாள்  சீக்கிரம் வந்தால் சிறப்பு!  சம்பளத்துக்குக் காத்திருக்க

மேஜை புத்தர்கள்

Image
எங்கள் மேஜையில் இருக்கும்  சிரிப்பு புத்தர்களில்  ஒருவருக்குக் காது கேட்காது!    மூடிக்கொண்டார்   அவர் ஏனதைச் செய்தார் என  யோசிக்கும் போதெல்லாம்  மற்றவர்கள் சத்தம்  கொஞ்சம் மந்தமாய்க் காதில் விழும்!  கண்களை மூடிக்கொண்ட  சாம்பல் நிற உடை புத்தர்  கேட்கும் சத்தங்களால் பயமடைந்து கத்துகிறார்!  வாயை மூடிக்கொண்ட  பழுப்பு நிற உடை புத்தர்  அநியாயக் குரல் கேட்டும்  வாய் திறவாதிருக்கிறார்!  எனக்கென்ன என்றமர்ந்த  காவி நிற புத்தரோ  கனவுலகில் இருந்துகொண்டு  சம்பந்தமின்றி ஜே பாடுகிறார்!  இவர்களின் சத்தம் எதுவுமே தெரியாத  அந்த நீல உடை புத்தர்  காதுகளை மூடியபடி  ஏதேதோ முனுமுனுக்கிறார்!  ஐம்புலத் தேர்ச்சி என்பது  அடக்கி ஆள்வதே அன்றி  அடக்கி வைப்பதன்று  காதுகேளாத புத்தரை  புண்ணியவான் என்று வர்ணித்து  அருகே சென்றால்,  உலகம் இருக்கும் நிலை அறியாமல்  அவர் காண்பதே உண்மையென  பேசிக் கொண்டிருக்கிறார்!  என்னவோ  அதுதான் மற்றவர்களைவிட  ஆபத்தானதாகத் தெரிகிறது!  இவர்களோடு புழுதியளைந்த களேபரத்தில்  ஒருகணம் நானும்கூட புத்தனோ என்று  வியந்துவிட்டேன்! ஒருவேளை ஆனால்,  கைகளைக் கூட கட்டாத  சுதந்திர புத்தனாக விழைகிறேன்!  புத

சரித்திரத் தேர்ச்சி கொள்

Image
வந்தவர் நின்றவர் சென்றவர் எத்தனை  வாழ்ந்தவர் எத்தனை சொல்லுகடீ - இன்னும்  வாழ்பவர் யாரெனச் சொல்லுங்கடீ - உயிர்  தந்தவர் எத்தனை நொந்தவர் எத்தனை  சரித்திரத் தேர்ச்சி கொள்ளுங்கடீ - எது  சரியெனக் கண்டுதான் சொல்லுங்கடீ  முன்னம் இருந்தவர் முற்றும் வளர்ந்தவர்  முழுமை அறிவு பெற்றவராம் - ஞான  முதிர்ச்சி நிலையை உற்றவராம் - வந்து  பின்னம் இணைந்தவர் பின்னம் புரிந்ததில்  பிழைத்த தெதுவும் இல்லையடீ - அந்தப்  பிழையில் வந்தது தொல்லையடீ  ஆண்ட பரம்பரை என்றுரைப்பார் அவர்  ஆண்டது மண்ணா மனங்களையா? - இல்லை  ஆற்றிய போரின் பிணங்களையா? - புகழ்  கொண்ட பரம்பரை என்றுரைப்பார் சிலர்  கொடுத்துச் சென்றது கோடியடி - பலர்  குரைத்துக் கிடக்கும் பேடியடீ  பொன்விளை பூமியில் மண்ணும் மலடெனப்  போட்டது யாரடி முள்விதையை - நிஜ போக்கில் அறிக அதன்கதையை - இங்கு  தன்விளை யாட்டுக்கு நாட்டை வளைக்கிற  தலைமை வந்த கதையென்னடீ - அந்த தகைமை கண்ட விலையென்னடீ  யாவும் உணர்ந்திட ஆழ்ந்து படிக்கணும்  யாருக்கும் யாவும் சமவுரிமை - இங்கும்  யாவர்க்கும் உண்டு பொதுவுடமை - உள்ள  நோவுக்கு நல்ல மருந்து கிடைத்திட  தேடிச் சரித்திரத் தேர்ச்சிகொள்ளு!! -விவேக்பா