திங்கள்... செவ்வாய்... புதன்....நண்பர்களுடன் காளமேகப்புலவர் பற்றி பேசிக்கொண்டிருக்கையில், ஒன்று முதல் பதினெட்டு வரையிலான எண்களைக் கொண்டே அவர் எழுதிய வெண்பாவை சொல்ல நேர்ந்தது. அதேபோல் வெண்பாவின் பாதியில் பெருமாளின் பத்து அவதாரங்களையும் அவர் பாடியிருப்பார். அவற்றையெல்லாம் பகிர்ந்த பரவசத்தில் வந்த பாக்கள்....

வாரத்தின் ஏழு நாட்களும் ஒரே வெண்பாவில் வருமாறு அமைந்தது..

இறைவாநின் சன்னிதியில் என்றும்நான் கேட்கும் 
நிறைவரம் ஒன்றுண்டு நீகேள்! - உறுதிங்கள் 
செவ்வாய் புதன்வியாழன் வெள்ளிசனி ஞாயி(று)என
ஒவ்வொரு நாளும் உதவு!

**

வள்ளிமண வாளா வயித்தியநா தாதுயரை
எள்ளிநகை யாடும் இயல்கேட்பேன் - உள்ளதிங்கள்
செவ்வாய் புதன்வியாழன் வெள்ளிசனி ஞாயி(று)என 
ஒவ்வொரு நாளும் உழைத்து!!

விவேக்பாரதி
25-01-22


Comments

  1. சிறப்பு!
    கிழமை நலங்காட்டும் கீர்த்திமிகு பாக்கள்
    வழமைத் திறன்சேர்ந்த வார்ப்பு!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை ஆண்டாள் - 1

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி