ததாஸ்து!


முணுமுணுத்த வாய்களின் 
ஒலிக்குறிப்பு அறிந்து
தூக்கிச் சலித்த கையுடன்
ததாஸ்து சொல்லிக்கொண்டே 
நகர்ந்தார் இறைவன்,

வலதுபுறம் கடிகாரம் பார்த்து
லன்ச் டைம் ஆன பெருமூச்சுடன்
இன்னும் முன்னால் செல்ல,

இறுகிய கண்களுடன்
முணுமுணுத்த சிறுவனிடம்
முறுவலுடன் நின்றார்!

சாமி இன்னிக்கு லீவு வுட்டுரு
அப்பா வாங்கிட்டு வந்த 
ஆல்ப்பன்லீபேல அப்டியே தர்றேன்
என்றவனுக்கும்
அவர் ததாஸ்து சொல்ல,
மானசீகமாய் சிரித்தவன்
உண்டியலில் மிட்டாயை இட,
இருந்த பசிக்கு
இறைவன் குழந்தையாகிச்
சப்பி சாப்பிடத் தொடங்கினார்,

புது நாய்க்குட்டியுடன் விளையாட 
கூடுதல் நேரம் கிடைத்த மகிழ்ச்சியில், 
சிறுவன் முன்னே செல்ல, 
வானம் ததாஸ்து என இடி இடித்தது!!

-விவேக்பாரதி
12-04-2021

Comments

Popular Posts