முத்தச்செலவு


ம்வா என்னும் 
இத்துனூண்டு முத்தத்தில் 
எப்படி உன் காதலை நீ 
அடக்கி வைக்கிறாய்? 

மஞ்சள் நிற உருண்டை 
வாய்ப்பகுதியில் 
ஒரு டபுள் யூவை கொடுத்து 
சிவப்பு நிற ஹார்ட்டின்
பறக்கும் கிஸ் ஸ்மைலி 
நம் காதலை 
அளந்துவிட முடியுமா என்ன? 

கிஸ்ஸெஸ் என்னும் 
வெறும் சொற்களில் எப்படி 
உன் முத்தப்பசை 
எனக்குள் இறங்கும்? 

இச்சு இச்சு என்னும் 
மைக் முத்தம் 
என் காதில் விழுந்ததே தவிற 
அதில் காதல் விழவில்லை!

இதழ் குவிந்த பவுட்டில் 
நீ அனுப்பும் செல்ஃபி கூட 
போதாது! 
மின்சாரம் என எழுதினால் 
விளக்கு எரியுமா என்ன? 

இனிமேல் 
முத்தம் கொடுக்க 
நினைப்பு வந்தால் 
பஸ் ஏறி வா, 
கை இடுக்கு வியர்வை 
கலந்து முயங்க
கட்டி இறுக்கி 
முத்தம் கொடு 

செலவுதான் 
முத்த வரவுக்கான 
ஒரே நியாயமாகும்!!

விவேக்பாரதி
12 ஜூலை 2022

செலவு = செலவழித்தல், பயணம்

Comments

Popular Posts