மிருகத்தின் வருடல்
நேற்று 
நீ இட்ட முத்தத்தில் 
ஏனடி காதல் இல்லை?

தணிக்கப்படக் கிடந்த 
உன் தணல் தாகம் 
புலப்பட்ட அளவு
நமக்குள் தகித்த 
காதல் மட்டும் அதில்
கடுகளவும் காணவில்லை! 

உச்சந்தலை தொட்டேன், 
உள்ளங்கால் வரை முத்தமிட்டேன்
பாதத்து முத்தத்தில் 
நீ கூசிச் சிலிர்த்த குளிர்
இன்னும் உள்ளக்கூட்டில் 
உறைந்து கிடக்கிறது!
கால் நகங்களில் 
என் நாவு நிறம் பூசுகையில்
நீ முணகியது இன்னும் 
ரீங்காரமாய் இருக்கிறது! 

ஆழம் வேண்டி 
அள்ளி அணைத்து 
எடுத்துச் சூடி 
எழுந்து தொழுது 
இழுத்துப் பிடித்து 
வளைவதெல்லாம் இருக்கட்டும், 
இறுக்கமின்றி தொட்டு 
முத்தமிட்டுத் தலைகோது
எனக்குள் இருப்பதோர் மிருகம் எனினும், 
இன்றதற்கு தேவை 
மாமிச விருந்தன்று! 
மடி வருடல்!! 

#சொல்லித்தெரிவதில்லை

விவேக்பாரதி
26.06.2022

Comments

Popular Posts