கவியொழுகும் உகிர்


தன் இணைகால் பிளவுபட
வழியும் ஈரத்தால்
காகித மெத்தையில் 
எழுத்திடுகிறது பேனா! 

அதனுடன் புணர்ந்து கிடந்த 
என் விரல்களுக்குள்
சூல்கொண்டிருக்கிறது 
வியர்வைப்புயல்!

மனோவேகத்தை ஈடு செய்ய 
மூச்சிறைத்து மூச்சிறத்துக்
கைகள் விட்ட முனகல்கள்
ஊழிப் பெருங்காற்று! 

நேரா இரவின் நிலவிருட்டில்
நினைவு தப்பிய போதையில்
இரண்டு நிமிட 
இரணியன் வதத்திற்குப்பின்
நெஞ்சு பிளந்து கிடக்கிறேன் நான்
காலத்தின் உகிரில்
சொட்டிக் கொண்டிருக்கிறது
இந்தக் கவிதை!!

-விவேக்பாரதி
16 ஜனவரி 2023

Comments

Popular Posts