~என்னைப் பற்றி~


நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதும் சோரா திருத்தல் - உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்!

என்கிற மகாகவி பாரதியார் வாக்கை ஆழமாக நம்பிக் கொண்டிருக்கிறேன். கோவில் மாநகரம் மதுரையில் பிறந்து, வெவ்வேறு ஊர்களுக்குப் பயணப்பட்டு கோட்டை மாநகரம் திருச்சியில் எனக்குள் இருக்கும் கவிதை வரத்தைக் கண்டு கொண்டேன். சென்னையில் கல்லூரி பயின்றேன். மாத இதழ், வார இதழ், நாளிதழ்களில் பணியாற்றி, தற்போது சென்னையில் தொலைக்காட்சியில் செய்தித் துறையில் உதவி ஆசிரியனாக பணி புரிகிறேன். 

தமிழ்ப் பற்று, தேச பக்தி, தெய்வ பக்தி ஆகிய மூன்றும் வேறில்லை என நம்புகிறேன். தெருவிலே சும்மா பாடிக்கொண்டு இருப்பவன். எழுதாமல் இருக்க முடியவில்லை என்ற காரணத்தால் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

காட்சித் தொடர்பியல் மாணவன். தற்போது இதழியலாளன்.

இதுவரை ஏழு புத்தகங்கள் (புத்தகப் பட்டியல்) எழுதியிருக்கிறேன். எதிலேனும் மக்களுக்குப் பயனிருந்தால் மகிழ்ச்சி என்று காத்திருக்கிறேன்.

புதியவர்களுடன் பழகப் பிடித்தவன். பழமையை ஒருபோதும் மறவாமல் இருப்பவன். பொய் பேசத் தெரிந்தவன், உண்மையைப் பேசுபவன். புன்னகை மறையாமல் வாழ முயற்சி செய்பவன். எப்போதுமே பாரதி பக்தன். தீரக் காளியின் செல்ல மகன்...

-நேர்காணல்கள்- 
Comments

 1. மிக்க மகிழ்ச்சி . உங்கள் கவிதைகள் மற்றும் உங்கள் அனைத்துத் தொடர்பான எழுத்துக்கள் , நிகழ்வுகள் தாங்கிய உங்கள் பெயரின் இயங்கவுள்ள வலைத்தளம் மேலும் மேலும் எழிலுடன் விரிவடைந்து பூத்துக் குலுங்கிட , எளியவனான எனது வாழ்த்துகளை உள்ளம் நிறைந்து உங்களுக்கு உரித்தாக்குகிறேன் .வாழ்க நூறாண்டு ! படைத்திடுக பற்பல காவியங்களை !பகிர்ந்திடுக கருத்துப் பெட்டகங்களை , பதிவுசெய்திடுக எதையும் தவறாமல் காலம் தாழ்த்தாமல் இனி .

  உங்கள் ரசிகனின் வாழ்த்துகள் ​

  பழனி குமார்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா. தமிழும் பராசக்தியும் காக்கட்டும்.

   Delete
 2. எதேச்சையாக பார்த்தேன். அழகு, அருமை. மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி. தொடர்ந்து வாசித்து ஆதரவு தருக

   Delete
 3. அருமையான பக்கம் தோழரே!! கல்லூரி கட்டுரைக்காக குறிப்பு எடுக்க வந்தவள் தங்கள் கவிதையிலே சிந்தை இழந்து தங்களை பற்றிய குறிப்பை பார்த்துக் கொண்டிருக்கிறேன் தமிழை வாழ வைக்க போராடும் தங்களை போன்ற சிலரை காண்பதில் மிக்க மகிழ்ச்சி தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
  வாழ்க தமிழ்!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி. தொடர்ந்து வாசித்து ஆதரவு தருக

   Delete

Post a Comment

Popular Posts